
சர்வதேச தரகு நிறுவனமான பெர்ன்டீன், பேடிஎம் பங்குகளின் இலக்கு விலையை 1,500 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாக உயர்த்தி, 'அவுட் பெர்பார்ம்' ரேட்டிங் வழங்கியுள்ளது.
2028 நிதியாண்டு முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் அமல்படுத்தப்பட்டால், பேடிஎம் நிறுவனத்தின் நிகர வருவாய் 3 முதல் 4 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 1,622.80 ரூபாயாக உள்ள பேடிஎம் பங்கின் விலை, கடந்த ஓராண்டில் 44.26% ஏற்றம் கண்டுள்ளது; 23 ஆய்வாளர்களில் 17 பேர் பங்குகளை வாங்கப் பரிந்துரைத்துள்ளனர்.