
குஞ்சாக்கோ போபன் நடிப்பில் உருவான உளவியல் கிரைம் திரில்லர் திரைப்படமான 'உன்மதம்', சோனி லிவ் தளத்தில் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரண் தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இது கடந்த ஜூலை 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மலையாளத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் 'உன்மதம்' ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.