
மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெருசலேம், தோஹா, பெய்ரூட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 11 அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் கெஷ்ம் தீவில் நவம்பர் 7-ம் தேதி இரண்டு முறை வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் MQ-1 ரக ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.