
சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்து ரூ.1,07,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.13,480 ஆகவும், வெள்ளி ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.240 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.