
செனகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தான்வி பத்ரி வெற்றி பெற்றுள்ளார்.
தாய்லாந்தின் குங்கயேவை எதிர்கொண்ட தான்வி, 21–17, 21–13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் யூத் ஒலிம்பிக் பாட்மின்மனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.