
இயக்குநர் அட்லீ, அல்லு அர்ஜுன் நடிக்கும் 'ராக்கா' திரைப்படத்தில் ஐஸ்வர்யா லெட்சுமி வில்லியாக நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கிறார், மேலும் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சைன்ஸ் பிக்சன் மற்றும் ஃபேண்டஸி கலந்த ஜானரில் உருவாகும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஒன்பது மொழிகளில் வெளியாகிறது, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.