
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 1 லட்சத்து 28,499 குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ள இந்த மோதிரங்களுக்காக, 70:30 என்ற விகிதத்தில் இரு நிறுவனங்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக மொத்தம் 4 லட்சத்து 41,667 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.