
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் தமிழகத்தின் சோலைராஜ் தர்மராஜ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
மேலும், பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள் மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ ஆகியோருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையையும் அவர் அறிவித்துள்ளார்.