
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் இன்று தொடங்கவுள்ள நிலையில், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் அணிகள் மோதுகின்றன.
ஆகஸ்ட் 4 முதல் 15 வரை நத்தத்திலும், ஆகஸ்ட் 18 முதல் 22 வரை சென்னையிலும் லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஆகஸ்ட் 28-ல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன; கடந்த சீசனில் திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.