
யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் 'யுவர்பேக்கர்ஸ் பிளே' என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.
பார்வையாளர்கள் விரும்பினால் அளிக்கும் நன்கொடைகள் ஆதரவற்ற மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும் என்று இந்த தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா தெரிவித்துள்ளார்.
இந்த தளத்தில் மனிதம், வி3, கோட்டா, மெல்லிசை, தாவுத் மற்றும் ஓ பட்டர்ஃபிளை போன்ற திரைப்படங்களின் டிரைலர்கள் திரையிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக சேவை தொடங்கப்பட்டது.