
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘பத்தா’ எனத் தலைப்பிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்’ தயாரிக்கும் இப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம், விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படமாகும்.