
சிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான 'இருமுடி' திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான இப்படத்தில் ரவி தேஜாவுடன் ப்ரியா பவானி சங்கர், சாய் குமார் மற்றும் சுவாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பட விநியோகத்தில் நிசாம் உரிமையினைப் பெற்ற ரவி தேஜாவுக்கு அந்த ஏரியாவில் இருந்து மட்டும் பங்குத் தொகையாக ரூ.30 கோடிக்கும் மேல் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.