தனிமையும் சமூக விலகலும் மன உணர்வு சார்ந்த விஷயம் மட்டுமல்லாமல், அது உடலையும் மனதையும் பாதிக்கும் ஒரு தீவிர ஆரோக்கியப் பிரச்சனை என்பதை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியான புதிய ஆய்வு வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
தனிமை மற்றும் சமூக விலகல் ஆகிய இரண்டு நிலைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், இந்த இரண்டும் இல்லாத பெண்களை விட சராசரியாக 3 ஆண்டுகள் குறைவாகவே நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்கின்றனர்.
ஆண்களுக்கு இந்த ஆரோக்கிய வாழ்நாள் இழப்பு 2.2 ஆண்டுகளாக உள்ளதோடு, மன அழுத்தம் மற்றும் பதற்றம் இல்லாத ஆரோக்கியமான வாழ்நாள் 5.8 ஆண்டுகள் குறைகிறது.