
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நேற்று தொகுப்பாளராக வந்த ரம்யா கிருஷ்ணன், தனது முதல் நாளே பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.
முனியம்மாவிடம் மரியாதை இல்லை என்று கூறிவிட்டு ரெட் டீமுக்கு சென்று வேலை பார்த்த ஜேசனின் நடவடிக்கையைச் சுட்டிக் காட்டிய ரம்யா கிருஷ்ணன், அது தொடர்பான குறும்படத்தை போட்டு அவருக்கு சரியான விளக்கம் அளித்தார்.
ஜேசன் தன் தரப்பில் எந்த தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து வாதிட்ட போதிலும், மற்ற போட்டியாளர்களும் முனியம்மா பேசியதில் தவறு இல்லை என்றே தெரிவித்தனர்.