
அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில், இந்தியாவின் பிரக்ஞானந்தா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் மொத்தம் 23.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.
ரேபிட் பிரிவில் 12 புள்ளிகளையும், பிளிட்ஸ் பிரிவில் 11.5 புள்ளிகளையும் பெற்ற பிரக்ஞானந்தா, இந்த வெற்றி மூலம் ரூ. 48 லட்சம் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
இந்தத் தொடரின் 5-வது சுற்று ஆகஸ்ட் 10 முதல் 20 வரை நடைபெறவுள்ள நிலையில், அதில் சிறப்பாகச் செயல்பட்டால் ஆகஸ்ட் 22-27 வரை நடக்கும் கிராண்ட் செஸ் டூர் பைனலுக்கு அவர் தகுதி பெறலாம்.