
பிரீமியர் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ன்மவுத் அணியைத் தோற்கடித்தது.
ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் போர்ன்மவுத் வீரர் மார்கஸ் டேவர்னியர் கோல் அடித்த நிலையில், 84-வது நிமிடத்தில் மார்க் குவேஹி சமநிலை கோல் அடித்தார்.
கூடுதல் நேரமான 90+2-வது நிமிடத்தில் ஜோஸ்கோ குவார்டியோல் வெற்றி கோலை அடித்து மான்செஸ்டர் சிட்டி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.