
வீடு கட்ட அல்லது மனை வாங்க ஸ்திர ராசி மற்றும் லக்னங்களில், முழு நட்சத்திர நாட்களில் பஞ்சாங்கம் பார்த்து தொடங்குவது வீட்டின் நிலைத்தன்மைக்கு நல்லது என சாஸ்திரம் கூறுகிறது.
கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளைக் கட்ட தை, ஆடி, ஆவணி, மாசி மாதங்களும், வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைக் கட்ட சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களும் உகந்தவை.
நிலத்தின் கிழக்குப் பகுதி தாழ்வாகவும், மேற்குப் பகுதி உயர்ந்தும் இருப்பது வீடு கட்ட உகந்த அமைப்பாகக் கருதப்படுகிறது.