
அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலம் கொலம்பியாவில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 29 வயதான கிறிஸ்டோபர் டீலாங் என்ற போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.
குடும்பத் தகராறு தொடர்பாக விசாரணை நடத்தச் சென்றபோது நடந்த இந்த சம்பவத்தில், டெமிக் என்ற மற்றொரு அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சக போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 33 வயதான ஆடம் டைலர் டவ்டி என்ற குற்றவாளி சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.