
நடிகை கியாரா அத்வானி கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' திரைப்படத்திற்காக ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்ப காலத்தில் ரூ.3 முதல் 4 கோடி வரை சம்பளம் பெற்று வந்த கியாரா, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார்.
ராம் சரணுடன் நடித்த 'கேம் சேஞ்சர்' படத்தில் ரூ.5 முதல் 7 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படும் நிலையில், அவரது சம்பளம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.