
சவுதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சவுதி சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.