
சென்னையில் நடைபெற்ற 'மேஜிக் மணி சம்மிட் 2026' மாநாட்டில், நிதி மேலாண்மை, பங்குச் சந்தை மற்றும் நீண்டகால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
2001-ல் 2,600 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், 2024-ல் 86,159 புள்ளிகளை எட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நிபுணர்கள், சந்தையின் தற்காலிக ஏற்ற இறக்கங்களை விட நீண்டகால முதலீடே அதிக பலன் தரும் என்றனர்.
இந்திய முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர் வரை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளதாக India INX நிறுவனத்தின் சி.இ.ஓ விஜய் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.