
பெங்களூரு ஸ்ரீ கன்டீவ்ரா மைதானத்தில் பிபா அட்டவணைப்படி நடைபெற்ற சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் இந்தியாவும் பனாமாவும் மோதின.
போட்டியின் 41வது நிமிடத்தில் இந்தியாவின் பிஜோய் தந்த பந்தை பயன்படுத்தி ரியான் வில்லியம்ஸ் கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் பனாமா வீரர் வாலன்சியா 68வது நிமிடத்தில் கோல் அடிக்க, முடிவில் போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் (டிரா) முடிந்தது.