
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் கூட்டம், பல்வேறு வாத விவாதங்களுடன் மதியம் கடந்து மாலை 3:15 மணி வரை நீண்ட நேரம் நடைபெற்றது.
காலை 9:30 மணிக்குத் தொடங்கிய அவையில் காவிரி தீர்மானம் மற்றும் ஒன்றிய அரசின் வரிப்பகிர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 11:20 மணிக்கு விவாதங்கள் தொடங்கின.
விவாதத்தின் போது தவெக எம்.எல்.ஏ தஞ்சை சரவணன் மற்றும் அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்களது கட்சித் தலைவர்களைப் புகழ்ந்து பேசியது அவையில் கவனத்தை ஈர்த்தது.