
மருத்துவரின் முறையான பரிந்துரை சீட்டுகள் இல்லாமல் அட்டவணை எச், எச்1 மற்றும் எக்ஸ் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க சிசிடிவி கண்காணிப்பை கட்டாயமாக்க மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
சில மருந்துக் கடைகளில் தூக்க மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் பரிந்துரை இல்லாமல் விற்கப்படுவது போதைக்காகவும் தற்கொலைக்காகவும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து அமைச்சகம் கருத்துக்களை கோரியுள்ளது.