
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள பென்டன்வில்லி விமான நிலையத்திலிருந்து தனது செஸ்னா விமானத்தில் புறப்பட்ட விமானி பெஞ்சமின் மெக்டேனியல் வானில் 8 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்டுள்ளார்.
நவம்பர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' விளையாட்டை வரவேற்கும் விதமாக, 956 மைல்கள் தூரம் பறந்து ப்ளைட்ரடார் 24 கண்காணிப்புத் தளத்தில் இந்த டிஜிட்டல் ஓவியத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
இந்த வான் ஓவியத்தில் GTA 6 லோகோ, ஹெலிகாப்டர், முதலை, பனை மரங்கள் மற்றும் கார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதுடன், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.