
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142-ன் கீழ் ஜூலை 20 முதல் 25 வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது.
இருப்பினும், ஜந்தர் மந்தர் போராட்டங்களில் கலந்துகொண்ட 2,873 நபர்கள் மீது கடுமையான குற்றப் பின்னணி உள்ளதால், அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய டில்லி போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.