
1970-களில் தொடங்கி 2020 வரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் மோகன் சர்மா, தற்போது கும்மிடிப்பூண்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்த இவர், 'கண்ணெதிரே தோன்றினாள்', 'ப்ரண்ட்ஸ்' போன்ற 18 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் வயோதிகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மோகன் சர்மாவுக்கு மருத்துவச் செலவுகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி அளித்துள்ளார்.