
கஜகஸ்தானில் நடக்கும் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில், மெத்வதேவ் ஜப்பானின் ஷோ ஷிமாபுகுரோவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், பிரான்சின் டெரன்ஸ் ஆத்மனே உடன் மோதுகிறார்.