
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நடந்து முடிந்த 4 போட்டிகளில் 3 போட்டிகளில் இந்தியாவும், 1 போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ள நிலையில், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி ஹமில்டன் நகரில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.