
நடிகர் சரண்ராஜ் கொலை வழக்கில், புலனாய்வு அதிகாரி அகிலா வழக்கை திசை திருப்பியதாக சென்னை நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
சிசிடிவி காட்சிகளை சேகரிக்க தவறியதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக நீதிபதி கூறினார்.
நேர்மையற்ற விசாரணை நடத்திய எஸ்.ஐ அகிலா மீது சட்டப்பூர்வ மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், புதிய அதிகாரியை நியமித்து 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.