
ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் நிறுவனம் மற்றும் ஏர்பஸ் இணைந்து நடத்திய சோதனையில், மெல்போர்னில் இருந்து பிரான்சின் டூலூஸ் வரை 24 மணி நேரம் 24 நிமிடங்கள் இடைநில்லாமல் விமானம் பறந்து சாதனை படைத்துள்ளது.
புராஜக்ட் சன்ரைஸ் திட்டத்தின் கீழ் 23,075 கிலோ மீட்டர் தூரம் பறந்த இந்த விமானத்தில், கூடுதலாக 20 ஆயிரம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வெற்றியின் அடிப்படையில் 2027-ஆம் ஆண்டு முதல் சிட்னி - லண்டன் மற்றும் சிட்னி - நியூயார்க் இடையே நேரடி நீண்ட தூர விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.