
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 64.55 அடியாக இருந்தது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளநீர் அபாயக் கட்டத்தைத் தாண்டிச் செல்வதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.