
பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான இப்படம், வருகிற 4-ம் தேதி தமிழில் வெளியாகவுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பகத் பாசில் கலந்துகொண்டார்.
இயக்குநர் பிரேமுடன் இணைந்து பணியாற்றிய தனது அடுத்த தமிழ்த் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என பகத் பாசில் தெரிவித்துள்ளார்.