
மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ காரின் விலையை மாற்றியமைத்துள்ள நிலையில், இதன் விலை தற்போது ரூ. 24.94 லட்சம் முதல் ரூ. 28.70 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை ஜீட்டா+ ஹைப்ரிட் வேரியன்ட்டின் விலை ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ. 24.94 லட்சமாக உள்ளது, அதேசமயம் மற்ற இரண்டு மாடல்களின் விலை ரூ. 10,000 உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்த மாடலின் ஒரு வேரியண்ட்டின் விலை ரூ. 25,000 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.