
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் கடந்த ஓராண்டில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் வேலையை விட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஆறு டாப் நிறுவனங்களில் மொத்த பணியாளர் சேர்க்கை 24,422 குறைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு அதிகரிப்பதும், தொழில்நுட்ப தேவைகள் மாறிவருவதும் பாரம்பரிய ஐடி வேலைவாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.