
சீன அறிவியல் அகாதமியின் பிளாஸ்மா இயற்பியல் நிறுவனம், அணு இணைவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'EAST' என்ற செயற்கைச் சூரியன் திட்டத்தை அன்ஹுய் மாகாணத்தில் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் 582 டன் எடையுள்ள 'D' வடிவ காந்த உலையில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையை உருவாக்கி, 1,000 வினாடிகளுக்கு மேல் பிளாஸ்மாவை நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் அணுக்கரு இணைவு ஆற்றல் மூலம் வணிக ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்வதை சீனா தனது முக்கிய மைல்கல்லாகக் கொண்டுள்ளது.