
ஸ்லோவாக்கியாவில் நடைபெறும் யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், 18 வயதான இந்திய வீராங்கனை காஜல் தோசாக் 76 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீனாவின் ஜிங்ரூ சுனை 7-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி காஜல் தனது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் தங்கத்தை கைப்பற்றினார்.
மேலும், தனு சர்மா (72 கிலோ) மற்றும் சவிதா (62 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.