
இணைய வசதி இல்லாமலேயே பட்டன் போன்கள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் போன்பே யுபிஐ 123பே என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சாதாரண மொபைல் போன்களைப் பயன்படுத்தும் 20 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கருத்தில் கொண்டு இந்த எஸ்எம்எஸ் அடிப்படையிலான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவிலான 2ஜி இணைப்பு மட்டுமே கிடைக்கும் பகுதிகளிலும் இந்த சேவை தடையின்றி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.