
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை என 19 இடங்களில் நடந்த சோதனையில் 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த 2020 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு மற்றும் பணியிட நியமன முறைகேடுகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.