
சென்னை பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் அரசாணையை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சுற்றுச்சூழல் துறை மற்றும் மீன்வளத்துறை ஒப்புதல் பெறப்படவில்லை என்றும், ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் இத்திட்டம் தன்னிச்சையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.