
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரியை உயர்த்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
600 சதுர அடிக்கு குறைவான வீடுகளுக்கு 25 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமான வீடுகளுக்கு 100 சதவீதமும் வரி உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த வரி உயர்வு நடவடிக்கையை முழுமையாகக் கைவிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.