
வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் 70 சதவீத சுங்கச்சாவடிகளில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் போது சுங்கச்சாவடி வசூல் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வரை வருவாய் கிடைக்கும்.