சின்னத்திரை நடிகை அதிதி சர்மா, தனது கணவர் அபினீத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை மற்றும் மன உளைச்சல் புகாரை ஜூலை 31 அன்று அளித்துள்ளார்.
திருமணத்தின் போது வழங்கப்பட்ட வைர மோதிரம் மற்றும் தங்க நகைகளை மாமியார் பறித்துக்கொண்டதாகவும், தன்னை தனிமைப்படுத்தியதாகவும் அதிதி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் கோரேகான் போலீசார் அபினீத், அவரது தாய் ஊர்மிளா மற்றும் சகோதரி கீர்த்தி ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.