
ஈரான்-அமெரிக்கா இடையிலான ராணுவ மோதல் மற்றும் சவுதி அரேபியாவின் எண்ணெய் தளங்கள் மீதான தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு நேற்று மீண்டும் 100 டாலரை எட்டியது.
விலை பின்னர் 99.90 டாலராகச் சரிந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் நீடிக்கிறது.