
ஜப்பானில் நடந்து வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் அணி ரிகர்வ் வில்வித்தை பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
தங்கத்திற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 1–5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தது.