
மதுரை அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தலைமையாசிரியை விமலாதேவி மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் தாயாரை கை கட்டி நிற்க வைத்தது மற்றும் மாணவியை சாதிய ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்குக் காரணம் எனப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
உசிலம்பட்டி தாலுகா போலீசார் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவி 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று பிளஸ் 1 பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.