
செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள பிபா ஆசியன் கோப்பை கால்பந்து தொடரிலிருந்து இந்திய அணி விலகுவதாக அறிவித்துள்ளது.
அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் பிரேசில் அணியுடன் நடைபெறும் நட்புப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரு முக்கிய போட்டிகளில் விளையாட முடியாது என்பதால் இந்த விலகல் முடிவு எடுக்கப்பட்டதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.