
இயக்குநர் பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான தேனியில் ரூ.2.50 கோடி செலவில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.
சென்னை தரமணி எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ.9.25 கோடியில் நவீன செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
தமிழக எல்லை போராட்டக் காவலர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.7,500-லிருந்து ரூ.10,000-ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட 23 புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.