
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது.
இப்போட்டிகளுக்கான நேரடி டிக்கெட் விற்பனை இன்று முதல் என்.பி.ஆர். கல்லூரி நுழைவாயிலில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
ரசிகர்கள் District.in இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.