
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் அந்த அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது 150-வது டி20 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தச் சாதனையின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்ததுடன், 150 விக்கெட்டுகளைக் கடந்த மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.